[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

“குடிக்க தண்ணீரையும் கொண்டு வாருங்கள்” - பள்ளிகள் அதிர்ச்சி கட்டளை 

some-private-schools-have-suggested-that-students-should-have-bring-drinking-water-in-chennai

சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் மாணவர்களே குடிநீர் கொண்டுவர வேண்டும் என சில தனியார் பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தலைநகரமான சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகளான செம்பரம்‌பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னையின் ஒருநாள் குடிநீர் தேவை 1200 மில்லியன் லிட்டராக உள்ள நிலையில், குடிநீர் பிரச்னையை தீர்க்க சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Related image
இந்நிலையில் தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டன. சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் இந்தச் சூழலில் சில பள்ளிகளில் மாணவர்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் திறப்பட்டதாக கூறப்பட்டது. 

Image result for students water in chennai

இச்சூழலில் சென்னையில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் குடிநீரை கொடுத்தனுப்புங்கள் என பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளன. சில அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஏற்கனவே புத்தக சுமையுடன் செல்லும் மாணவர்கள் குடிநீர் பாட்டிலையும் எடுத்து செல்வது  மேலும் சுமையை கூட்டும் எனப் பெற்றோர் கூறுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close