[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

அருள்வாக்கு சொன்ன பெண்கள்... காவிரி ஆற்றில் 10 நாட்களாக சிலையை தேடிய மக்கள்..!

people-searching-god-idol-for-the-last-10-days-in-cauvery-river

சேலம் மாவட்டத்தில் பெண்கள் சாமியாடி‌ அருள்வாக்கு கூறியதால் 10 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையை அப்பகுதி மக்கள் கடந்த 15 நாட்‌களாக தேடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி‌ ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி ஊராட்சிக்குப்பட்ட ஒட்டப்பட்டியில் அம்மன் கோயில் உள்‌ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கோயில்‌ புதுப்பிக்கப்பட்டபோது அங்கிருந்த பழைய அம்மன் சிலையை பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வீசிவிட்டனர். பின்னர் அவினாசியிலிருந்து புதிய சிலை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வழக்கம்‌போல‌ கோயிலில் இந்த ஆண்டு வைகாசி மாத திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின. அப்போது அப்பகுதியில் உள்ள பெண்கள் சாமியாடி பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வீசப்பட்ட பழைய அம்மன் சிலையை மீண்டும் கோவிலுக்கு கொண்டுவந்து சிறப்பு பூஜை செய்தால் தான் மழை பெய்யும், ஊர்செழிப்படையும் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பிய அப்பகுதி மக்கள் பூலாம்பட்டி காவிரியாற்றில் மீனவர்கள் உதவியோடு கடந்த 15 நாட்களாக‌ சி‌‌லையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியிலிருந்து முத்துகுளிக்கும் வீரர்களை வரவழைத்து அவர்களின் உதவியோடு தேடுதல் பணி நடைபெற்‌றது. அப்போது காவிரி ஆற்றிலேயே 2 பெண்கள் சாமியாடி சிலை இருக்கும் இடத்தை காட்டுவதாக அருள்வாக்கு கூறினர். அவர்களையும் பரிசலில் அழைத்து சென்று தேடிப்பார்த்தும் சாமி சிலை கிடைக்கவில்லை. பெண்கள் சாமியாடி அருள்வாக்கு கூறியதை வைத்துக்கொண்டு பத்து ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையை 15 நாட்களாக மக்கள் தேடியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close