[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் !

tree-ambulance-service-start-in-chennai

மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நாளை உலக சுற்றுசூழல் தினம் கடைப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ட்ரீ ஆம்புலன்ஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் நாளை பயணிக்க உள்ளது. இதற்கு முன்னோட்டமாக சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் வேரோடு சாய்ந்த மரம் ஒன்றை மாற்று இடத்தில் நடப்பட்டது. மரங்களுக்கான ஆம்புலன்ஸில் மரங்களுக்கு முதலுதவி, வேரோடு சாய்ந்த மரங்கள் மறு பதியம் இடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட உள்ளது. 

Image result for Tree Ambulance service

இந்த ஆம்புலன்ஸ் சேவை முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பயணம் செய்ய உள்ளது. பின்னர் நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று மரக்கன்றுகள் நடுதல், வேரோடு சாய்ந்த மரங்கள் மறு பதியம் இடுதல் போன்ற மரங்களுக்கான முதலுதவி வழங்கும் பணிகளில் ஈடுபட உள்ளது. பின்னர் அடுத்த இரண்டு மாதங்களில் தலைநகர் டெல்லியை சென்றடைய உள்ளது. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்களில் மரக்கன்றுகள் வழங்கும் பனியில் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆம்புலன்ஸ் சேவையை பெற www.tree ambulance.org என்ற இணையதளம் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close