[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

‘வேண்டாம் ஹைட்ரோ கார்பன்’ - ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘#StopHydroCarbon’ ஹேஷ்டேக்

stophydrocarbon-top-trending-twitter-hashtags-in-chennai

#StopHydroCarbon என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட உள்ளன. 

       

அந்த ஒப்பந்தத்தின்படி தமிழகத்தில், நாகை மாவட்டம் வேதாரண்யம் கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயுவை எடுக்க உள்ளது. அதற்காக சில இடங்களில் முதற்கட்ட பணிகளை வேதாந்தா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளதால் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

         

இந்நிலையில், சென்னை அளவில் #StopHydroCarbon என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விவசாயத்தினை பாதுகாக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என பலரும் அதில் வலியுறுத்தியுள்ளனர். 

            

இதில், சிலர் நேசமணி என்ற வடிவேலுவின் கதாபாத்திரத்தை உலகம் முழுவதும் ட்ரெண்ட் செய்த நாம், #StopHydroCarbon என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏனெனில் #Pray_for_Naesamani என்ற ஹெஷ்டேக் ட்ரெண்ட் ஆன போது, பொதுமக்களின் முக்கியமான பிரச்னைகளுக்கு இதுபோன்று பிரச்சாரம் செய்வதில்லை சிலர் குறைகூறியிருந்தனர். இந்நிலையில்தான், #StopHydroCarbon ட்ரெண்ட் ஆகியுள்ளது. ஆனால், அது சென்னை அளவில் மட்டுமே உள்ளது.

         

வேறு சிலர், “டிவிட்டரில் டிரென்ட் செய்தால் மட்டும் போதுமா?....இதற்கு ஆக்கப்பூர்வமான தீர்வுதான் என்ன ?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். சமூக வலைதளங்களை மக்களுக்கான பிரச்னைகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

         

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close