[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சியமைக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்

“சிறுநீரகம் தானம் செய்தால் ரூ.3 கோடி”- தனியார் மருத்துவமனை பெயரில் மோசடி

cheating-on-the-name-private-hospital-name

சிறுநீரக தானம் செய்தால் 3 கோடி ரூபாய் கிடைக்கும் எனக் கூறி அதற்காக பதிவுக் கட்டணம் பெற்று தனியார் மருத்துவமனை பெயரில் மோசடி நடைபெற்றுள்ளது.

தங்கள் மருத்துவமனையின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டுமென ஈரோடு தனியார் மருத்துவமனை சார்பில் காவல் துறையிடம் புகார் தரப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரபாகர் அளித்துள்ள புகார் மனுவில், சிறுநீரக தானத்திற்கு அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி, தங்கள் மருத்துவமனை பெயரை பயன்படுத்தி சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறுநீரகம் தானம் செய்தால் 3 கோடி ரூபாய் வரை தருவதாகவும், அதற்கு பதிவு கட்டணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் எனவும் வாட்ஸ் அப் மூலமாக மோசடி செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையின் சரியான முகவரியை கொண்டு போலியாக பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியுள்ளனர் என்றும் மருத்துவர் பிரபாகர் கூறியுள்ளார்.

தங்கள் மருத்துவமனையின் பெயரை பயன்படுத்தி தவறான தொலைபேசி எண் மற்றும் வங்கிக்கணக்கு மூலம் பண மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தங்களின் மருத்துவமனையின் பெயரை தவறான முறையில் பயன்படுத்தி அப்பாவி நபர்களிடம் பணம் பறிக்கும் கூட்டத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close