[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த காவலர் உயிரிழப்பு

police-killed-in-drug-relief-center

திருச்சியில் போதை மறுவாழ்வு மையத்தில் அனும‌திக்கப்பட்டு இருந்த காவலர் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

திருச்சி கே.கே.நகரில் LIFE CARE என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மனநல மருத்துவர் மணிவண்ணன் என்பவர் இந்த மையத்தை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த மையத்தில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன் என்பவர் அனுமதிக்கப்பட்டார். சேர்க்கப்பட்ட 3 நாள்களில் தமிழ்ச்செல்வன் உயிரிழந்துள்ளார். அவரது உடலை மறுவாழ்வு மையத்தினரே சொந்த ஊருக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். 

தமிழ்ச்செல்வன் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் மறுவாழ்வு மையத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போதுதான் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்டோர் சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இருவர் நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து வந்ததும் கண்டறியப்பட்டது. மறுவாழ்வு மைய ஊழியர்கள் நோயாளிகளை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து பொதுமக்கள் இணைந்து சங்கிலிகளை அகற்றி நோயாளிகளை மீட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close