[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி ? முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

water-scarcity-cm-palanisamy-discussion

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கூட அவ்வப்போது கோடை மழை பெய்கிறது. இதனால் ஓரளவிற்கு மக்கள் நிம்மதி அடைகின்றனர். ஆனால் சென்னையை எடுத்துக் கொண்டால் அனல் பறக்கும் வெயில்தான். சென்னை மக்கள் மழையை பார்த்தே மாதக் கணக்கு ஆகிறது. ஒரு சின்ன மழையாவது வராதா என்ற ஏக்கத்தில் சென்னை மக்கள் உள்ளனர். அத்துடன் தண்ணீர் தட்டுப்பாடும் தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி,செங்கோட்டையன் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி, தடையின்றி தண்ணீர் விநியோகிப்பதற்கான வழிமுறைகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசித்தார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பெரும்பாலான அணைகள், ஏரிகள் வறண்டுபோய் காட்சியளிப்பதால், கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close