[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

19.5 டி.எம்.சி. நீரை திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன் ? வைகோ கேள்வி

vaiko-questions-to-tn-government

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் 19.5 டி.எம்.சி. நீரைத் திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன்? என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார். ஆனால் இத்த உத்தரவுக்கு பின் பேட்டியளித்துள்ள கர்நாடகா நீர்ப் பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், மழை இல்லாததாலும், அணைகளில் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் தமிழகத்திற்கு 9.19  டிஎம்சி நீரை எப்படி திறக்க முடியும் என கேள்வி எழுப்பியதை வைகோ சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் கர்நாடக அணைகளுக்கு எதிர்பார்க்கும் நீர்வரத்து இருந்தால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளதையும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடகா தண்ணீரை திறக்கப்போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது என வைகோ தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நிலுவைத் தண்ணீரான 19.5 டிஎம்சி தண்ணீரை திறக்க தமிழக அரசு காவிரி ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தாதது ஏன்? எனவும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். குறுவைச் சாகுபடிப் பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர் தேவைக்கும் தமிழகத்தின் பங்கான 19.5 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வைகோ தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close