[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்
  • BREAKING-NEWS “கல்வியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது...”சூர்யா கொடுத்த பதிலடி
  • BREAKING-NEWS “மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்

மோடி மக்களை ஈர்க்கும் தலைவர்: ரஜினிகாந்த்

modi-is-a-charismatic-leader-rajinikanth

''பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, மோடி என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி. அவர் மக்களைக் ஈர்க்கும் தலைவராக இருக்கிறார்'' என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்தார். 

தனது போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர் கூறும்போது, ’’இந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மோடி என்கிற தனி மனதருக்கு கிடைத்த வெற்றி. இந்திய அரசியலை பொறுத்தவரை, தலைவரை வைத்துதான் தேர்தலில் அந்தந்தக் கட்சிகளுக்கு அதிக வெற்றி கிடைக்கும். நேருவுக்கு பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மக்களை இழுக்கும் தலைவராக இருந்தனர். ராஜீவ் காந்தியை காலம் பலி கொடுத்துவிட்டது. அடுத்து வாஜ்பாய். அதற்கு பின் மோடி, மக்களை ஈர்க்கும் தலைவராக கிடைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. அது போல பார்ததால், இப்போது, மக்களை ஈர்க்கும் தலைவராக மோடி இருக்கிறார்.

Image result for Rajinikanth

இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவை விட்டுவிட்டு மோடிக்கு ஆதரவான அலை வீசியது. தமிழகத்தில் எதிரான அலை வீசியது. அப்படி ஒரு முறை ஆதரவு அலையோ, எதிர்ப்பு அலையோ வீசிவிட்டால் அதை எதிர்த்து யாரும் நீந்த முடியாது. மோடிக்கு எதிரான அலைக்கு, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நீட், மற்றும் எதிர்க்கட்சிகள் செய்த சூறாவளி பிரசாரம் காரணமாக இருந்தது. 

Image result for Rajinikanth

கட்சி ஆரம்பித்த 14 மாதங்களில் தமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ள கமலுக்கு வாழ்த்துக்கள். நதிகள் இணைப்பு பற்றி நிதின் கட்கரி கூறியிருப்பது பாராட்டத்தக்கது. 

காங்கிரஸ் பழமையான கட்சி. மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்களை இளையவரான ராகுல் காந்தி கையாள்வது கடினம் என நினைக்கி றேன். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவர் பதவி
விலகக் கூடாது. ஆளும்கட்சி போல எதிர்க்கட்சியும் முக்கியம் என்பதால், அவர் பதவி விலகக் கூடாது. மோடியின் பதவி ஏற்பு விழாவில் எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. நான் கண்டிப்பாக கலந்துகொள்வேன்’’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close