[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

இலவச கட்டாய கல்வி சட்டத்தில் படிக்கும் மாணவர்களிடம் கட்டண வசூல் !

govt-default-payment-school-demand-fee-from-students

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் இருந்து பள்ளிகள் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். 6 முதல் 14 வயதுக்குப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த கல்வி சட்டத்தை கொண்டுவந்தது. அதன்படி தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் இருந்து பள்ளிகள் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்று இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எல்கேஜி பயிலும் மாணவர்களிடம் 10,000 கேட்பதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் புத்தகம் மற்றும் சீருடை செலவிற்கான பணமாக இதனை கேட்பதாகவும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க சில பள்ளிகளோ, மாணவ- மாணவிடம் இருந்து முழு கட்டணத்தையும் வசூல் செய்துவிடுகிறது. பெற்றோர்கள் இதுகுறித்து கேட்டால், மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்தியிய பின் நீங்கள் செலுத்திய கட்டணம் உங்களுக்கே திருப்பி கொடுக்கப்படும் என கூறுவதாகவும் தெரிகிறது.

இலவச கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்திருந்தாலும் கட்டணம் கேட்பதால் என்ன செய்வதென்று பல பெற்றோர்கள் பரிதவிக்கின்றனர். இருப்பினும் அவர்கள் இதுதொடர்பாக புகார் கொடுக்க முன்வருவதில்லை. ஏனென்றால் தங்கள் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான நிதியை அரசு உரிய நேரத்தில் அந்தந்த பள்ளிகளுக்கே செலுத்தாமல் இருப்பதே தங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க காரணம் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அரசு கட்டணத்தை உரிய காலத்தில் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close