[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

காட்டு யானை தாக்கி சிறுமி பலி

a-7-year-old-girl-was-killed-by-a-wild-elephant

பொள்ளாச்சி அருகே நவமலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜு - சித்ரா தம்பதியினர். வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வரும் ராஜுவுக்கு ரஞ்சனா(எ)ரஞ்சனி என்கின்ற 7 வயது மகள் உள்ளார். அவர் அங்குள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். 

Image result for காட்டு யானை

இந்நிலையில் இன்று காலை தாய் சித்ரா மகள் ரஞ்சனியை அழைத்து கொண்டு பொள்ளாச்சி சென்று விட்டு பேருந்தில் நவமலை திரும்பினார். அப்போது இருவரும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியுள்ளது. அலறியடித்து ஒடிய சிறுமி ரஞ்சனாவை யானை தாக்கியது. இதனால் சித்ரா கதறி அழுதுள்ளார். மேலும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தபோது யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டது. 

Image result for death

பின்னர் படுகாயமடைந்த சிறுமி ரஞ்சனாவை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். தாய் கண்முன்னே யானை தாக்கி மகள் இறந்த சம்பவம் அப்பகுதி மலைவாழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close