[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு
  • BREAKING-NEWS 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ?' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
  • BREAKING-NEWS தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது
  • BREAKING-NEWS ஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
  • BREAKING-NEWS அதிமுக சார்பில் யாகம் நடத்தியதால்தான் தமிழகத்தில் நிறைய இடங்களில் மழை பெய்தது - தமிழிசை சவுந்தரராஜன்

எதிர்கட்சித் தலைவர் இல்லாமல் இரண்டாம் முறை மோடி ஆட்சி..!

pm-modi-ruling-again-with-opposition-leader

எதிர்கட்சித் தலைவர் இல்லாத வகையில், இந்த முறையும் பிரதமர் மோடி ஆட்சி அமைகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு 92 இடங்களும், மற்றவைகளுக்கு 100 இடங்களும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சியை மட்டும் எடுத்துக்கொண்டால் அக்கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 52.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தபட்சம் 55 தொகுதிகளிலாவது வென்றிருக்க வேண்டும். ஆனால் 52 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காது. அதேசமயம் ஆளுங்கட்சி விரும்பினால் மட்டுமே எதிர்கட்சி அந்தஸ்தை வழங்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

கடந்த முறை மக்களவைத் தேர்தலின்போதும், காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. தற்போது இரண்டாவது முறையும் காங்கிரஸ் கட்சி அதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், எதிர்கட்சி தலைவர் இல்லாமல் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறை முழுப் பெரும்பான்மையுடன் பிரதமராகும் காங்கிரஸ் அல்லாத கட்சியைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையும் மோடிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close