[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

மக்களவைத் தேர்தலில் சறுக்கலை சந்தித்த தமிழக பிரபலங்கள்

tn-celebrities-loses-in-elections

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் 36 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. வெறும் 2 இடங்களில் மட்டுமே அதிமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் எந்தெந்த பிரபலங்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர் எனப் பார்க்கலாம்.

பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய இணையமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக வசந்த குமார் நிறுத்தப்பட்டார். இங்கு போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து உள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்

பாஜக மாநிலத் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு எதிராக நிறுத்தப்பட்டார். தேர்தலுக்கு முன்பே கனிமொழிதான் வெற்றி பெறுவார் எனப் பெருவாரியானோர் எதிர்பார்த்தனர். அதன்படி 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.

ஹெச்.ராஜா

பாஜக தேசியத் தலைவரான ஹெச்.ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

சிபி ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சரான சிபி ராதாகிருஷ்ணன் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் முதலில் முன்னிலையை சந்தித்த சிபி ராதாகிருஷ்ணன் அதன்பின் பின்னடைவை சந்தித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நடராஜன் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

அதிமுக கூட்டணியில் தருமபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், அவரை எதிர்த்து போட்டியிட்ட செந்தில் குமாருடன் 20,000 வாக்குள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

திருமாவளவன்

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் பானை சின்னத்தில் போட்டியிட்டார் திருமாவளவன். நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட திருமாவளவன், 6000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்திதுத்துள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். மிகவும் போட்டி நிறைந்த பகுதியாக கருதப்பட்ட இத்தொகுதியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகனான ரவீந்தரநாத் குமார் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

கரூர்

கரூர் மக்களவைத் தொகுதியில் மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோதிமணி கிட்டத்தட்ட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close