[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்

“எதிர்பார்ப்பதே நாளை நடக்கும் ; ராகுல் பிரதமர் ஆவார்” - ஸ்டாலின் நம்பிக்கை

mk-stalin-said-congress-will-tomorrow-and-rahul-became-a-new-pm

நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதுவே நாளை நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சென்னை ராயபுரத்தில் தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், மத்தியில் நாம் எதிர்பார்ர்க்கும் ஆட்சி அமைவது உறுதி என்றும், ராகுல்காந்தி தான் பிரதமராக வருவார் என்றும் தெரிவித்தார். கருத்துகணிப்புகள் சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனத் தெரிவித்த ஸ்டாலின், மக்களின் கணிப்புதான் உண்மையான கணிப்பு எனக் கூறினார்.

இந்தியா முழுவதும் நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் காலை 8 மணிக்கே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்போது, வெற்றி வாக்கு வித்தியாசம், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகளைவிட குறைவாக இருந்தால், தேர்தல் அலுவலரின் மறு ‌சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close