[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

“தீவிரவாதியை மதத்துடன் அடையாளப்படுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்ற முழுத் தீர்ப்பு

do-not-identify-terrorist-with-his-religion-madras-hc-read-order

தீவிரவாதியை ஒருபோதும் அவரது மதம், சாதி ஆகியவற்றுடன் அடையாளப்படுத்த வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் அழுத்தமாக தெரிவித்துள்ளது.

“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என சர்ச்சைக்குரிய வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் பேசியது தொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு வந்தது. இந்த வழக்கில் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி புகழேந்தி, தன்னுடைய தீர்ப்பில் முக்கியமான பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், “அடிப்படைவாதி, தீவிரவாதி அல்லது பயங்கரவாதி என யாராக இருந்தாலும், அவர்களை அவர்கள் சார்ந்த மதம், நிறம், பிறந்த இடம் மற்றும் மொழியின் அடிப்படையில் குறிப்பிடக் கூடாது. ஒருவர் தன்னுடைய நடத்தையால்தான் கிரிமினல் ஆகிறார். பிறப்பின் அடிப்படையில் அல்ல. ஒரு கிரிமினலை அவரது மதம், சாதி அல்லது இனத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தினால், மக்கள் மத்தியில் வெறுப்புதான் அதிகரிக்கும். 

சமீபகாலமாக, வெறுப்பு பேச்சு என்பது சாதாரணமாக ஆகிவிட்டது. பழனி முருகனை நாய் உடன் ஒப்பிட்டு பேசிய விவகாரத்தில் பெண் ஒருவர் முன் ஜாமீன் கேட்டு இந்த நீதிமன்றத்தையே நாடியிருந்தார். அதேபோல், சில மாதங்களுக்கு முன்பு கடவுள் கிருஷ்ணர்தான் முதலில் பாலியல் பலாத்காரம் செய்தவர் என்று ஒரு தலைவர் பேசியது சர்ச்சை ஆகியது. பெரியாரின் சிலைகளை சிதைக்க வேண்டும் என்று ஒரு தலைவர் பேசியிருந்தார். ஊடகங்கள் இதுபோன்ற சர்ச்சைகுரிய வெறுப்பு பேச்சுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இதுகுறித்து மணிக்கணக்கில் கூடி விவாதம் செய்கிறார்கள். 

           

ஒருசிறு தீப்பொறியும் நெருப்பை உண்டாக்கும், அது காடுகளையே அழித்துவிடும். மக்களின் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையில் தொண்டர்களுக்கு தேவையாக உள்ளது. இதுபோன்ற மேடைப் பேச்சுகளால் நிறைய மோசமான சம்பவங்களை நம்முடைய நாடு சந்தித்துள்ளது. அப்பாவி மக்கள் நிறையவே பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

நாட்டின் பாதுகாப்பு என்பதுதான் சட்டத்திற்கு முதன்மையானது என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நடந்து முடிந்த பின்னர் நடவடிக்கை எடுப்பது மட்டும் அரசின் கடமை இல்லை, வரும்முன் தடுப்பதும்தான்” என்று கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close