[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

மருத்துவமனை வளாகத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை - காவலாளி தலைமறைவு 

sexual-harassment-of-the-girl-in-the-hospital-premises-in-nagercoil

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வடமாநில சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிவா சுகாஷ் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி சுபின் என்பவர் வடமாநில தம்பதியின் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

Image result for வடமாநில சிறுமிக்கு பாலியல் தொல்லை

மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை நேரில் பார்த்த அந்தச் சிறுமியின் தாய் மருத்துவமனை வளாகத்தில் கூச்சலிட்டுள்ளார். அப்போது காவலாளி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து அச்சிறுமியின் பொற்றோர் ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்துள்ளனர். 

இதனையடுத்து தப்பியோடிய மருத்துவமனைக் காவலாளி சுபினை தேடி வருகின்றனர். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதா தலைமையிலான அதிகாரிகள் சிறுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சைக்கு சென்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related image

ஆயிரக்கணக்கான பெண்கள் பயன்படுத்தி வரும் அந்த மருத்துவமனையில் 3 பெண் காவலர்கள் மட்டுமே உள்ளதனால்தான் இது போன்ற நடவடிக்கைகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மருத்துவமனையின் பாதுகாப்பிற்குப் போதிய பெண் காவலர்களை நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பத்மாவதி என்ற தனியார் நிறுவனம் பல்வேறு வேலைகளுக்கு ஆட்களை அமர்த்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close