[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

டிவி பார்த்த குழந்தை.. தாய் அடித்ததில் பரிதாபமாக உயிரிழப்பு

mother-killed-daughter-near-namakkal

நாமக்கல் அருகே டிவி பார்த்த 5 வயது சிறுமியை தாய் அடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் நித்திய கமலா. இவர் தனது கணவர் பாண்டியன் மற்றும் ஐந்து வயது மகள் லத்திகா ஸ்ரீயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த 5 வயது பெண் குழந்தை லத்திகாஸ்ரீ டிவி பார்த்து கொண்டு இருந்ததால், படிக்கவில்லை எனக்கூறி நித்திய கமலா சிறுமியை அடித்ததாக தெரிகிறது.

இதில் காயமடைந்த குழந்தை மயக்கமடைய உடனடியாக அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நாமக்கல் அரசு மருத்துமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் சிறுமியின் நிலைமை மோசமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்திய கமலத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close