[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாடு, ஒரு ரேஷன் அட்டை என உணவுத்துறை கொண்டுவர உள்ளது; இதன் மூலம் நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை மானிய விலையில் வாங்கிக்கொள்ளலாம் - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடந்த கூட்டதில் முடிவு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனம் உள்ளது - ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய வழக்கில் வேதாந்தா நிறுவனம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வாதம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

இலவச மடிக்கணினிகள் உண்மையில் பயன்படுகிறதா? - தமிழக அரசு

tamilnadu-government-ask-are-free-laptops-really-used

தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தின்கீழ் மடிக்கணினி பெற்ற மாணவ, மாணவிகளிடம் அதன் பயன்பாடு குறித்து தமிழக அரசு கருத்து கேட்டுள்ளது. 

அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக தமிழக அரசின் சார்பில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் மடிக்கணினிகள் உண்மையில் மாணவ, மாணவிகளுக்கு பயன்படுகிறதா அல்லது விற்கப்பட்டு விடுகிறதா என்பன போன்ற தகவல்களை அறிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 

இவற்றின் பயன்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் கருத்துக்கேட்பு நடத்தும் தமிழக அரசு, இலவச மடிக்கணினி வினியோகித்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பாலிடெக்னிகுகளுக்கு படிவங்களை அனுப்பியுள்ளது. அந்தக் கருத்துக்கேட்புப் படிவத்தில், மடிக்கணினியின் பயன்பாடு, தற்போதைய நிலை உள்ளிட்ட மொத்தம் 15 கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close