[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

“வாக்கு எண்ணிக்கையில் விழிப்புடன் இருங்கள்” - ஸ்டாலின் அறிவுறுத்தல்

mk-stalin-statement-to-dmk-party-members-for-vote-counting

வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டுமென்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின் திமுக முகவர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், மக்கள் எழுதிய தீர்ப்பை அதிகாரத்தின் கொடுங்கரங்கள் மூலம் திருத்தி எழுத ஆட்சியாளர்கள் திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார். மே 23ஆம் தேதியன்று குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வாக்கு எண்ணும் மையங்களுக்கு திமுக முகவர்கள் செல்ல வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். வாக்கு எண்ணும் மையங்களில் முறைப்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதை திமுக முகவர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

பதிவான வாக்குகளும் எண்ணிக்கையில் உள்ள வாக்குகளும் சரியான அளவில் உள்ளதா என ஒப்பிட வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மிகக் குறிப்பாக, கோயம்புத்தூர், ராமநாதபுரம், கரூர், தேனி இந்த 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற எந்த எல்லைக்கும் செல்லும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே அங்கு திமுக முகவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close