[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர் 

the-young-man-who-committed-suicide-by-releasing-video-in-chennai

வாலிபர் ஒருவர் அனைவருக்கும் வாழ்த்து செய்தி கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் ஐசிஎப் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்- கலா தம்பதியினர். இவருடைய மகன் முரளி(22) வீட்டில் சண்டை போட்டு கொண்டு ஜெ.ஜெ.நகரில் தனியாக வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். மேலும் அதே பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக பணிபுரிந்தும் வந்தார்.

இந்நிலையில் நேற்று முரளி வீடியோ மூலமாக தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை வாழ்த்தி பேசிவிட்டு நான் சாமியிடம் செல்கிறேன் என்று கூறி பதிவு செய்து அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஜெ ஜெ நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே தான் தங்கியிருந்த வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Related image

இது தொடர்பாக விசாரித்து சம்பவ இடத்துக்கு வந்த ஜெ ஜெ நகர் ஆய்வாளர் சுரேந்தர், முரளியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்த ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடியோ மூலமாக எல்லாரையும் வாழ்த்திவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close