[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

''கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு'' - முதல்வர் பழனிசாமி

aiadmk-alliance-will-win-in-tamil-nadu-says-cm-palanisamy

தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்கும் என்பது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

மத்திய ஆட்சியை தீர்மானிக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து 23ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பாஜகவே பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் எனப் பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதேபோன்று தமிழகத்தில் திமுகவே அதிக இடங்களைப் பிடிக்கும் எனவும், அதிமுக கூட்டணி குறைவான இடங்களை மட்டுமே பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் பல ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்கும் என்பது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 2016ம் ஆண்டு கருத்துக் கணிப்பை பொய்யாக்கினோம். அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரை தற்போதைய கருத்து கணிப்பை பொய்யாக்குவோம். புதுவை உள்பட 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக கூட்டணியே வெற்றிபெறும். 

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வறட்சி குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது. 8 வழி சாலை திட்டத்திற்கு 7 சதவீதத்தினர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அனைவரும் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close