[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS அடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

மண்ணுளிப் பாம்பை ‌கடத்தி விற்க முயற்சி : 4 பேர் கைது

four-persons-arrested-for-trying-to-sell-the-earth-serpent-snake-in-courtallam

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே அரிய வகை மண்ணுளிப் பாம்பை கடத்தி விற்க முயன்றதாக 4 பேரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அரியவகை மூலிகைகள் உள்ளதால் இங்கு அரியவகை விலங்கினங்கள், ஊர்வனவகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் அறிய வகை பாம்பான இரு தலைமணியன் என்று அழைக்கப்படும் மண்ணுளி பாம்பு கடத்தப்படுவதாகவும், அதற்கு சில கும்பல்கள் உடந்தையாக இருப்பதாகவும், குற்றாலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் குற்றாலம் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வந்தனர். 

Image result for மண்ணுளிப் பாம்பு

இந்த சூழலில் குற்றாலம் அண்ணா சிலை அருகில் உள்ள தனியார் விடுதி அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நான்கு பேர் நின்று கொண்டு இருந்ததால், அவர்களை குற்றாலம் போலீசார் விசாரணை செய்தனர்.அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு பையை சோதனை செய்ததில், அரிய வகையை சேர்ந்த இருதலை மணியன் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் சென்னை,கேரளா,குற்றாலம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

Image result for மண்ணுளிப் பாம்பு

இதனையடுத்து உடனடியாக நான்கு பேரையும் குற்றாலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் பிடிபட்ட பாம்பை சென்னைக்கு கடத்த இருந்ததாக கூறியுள்ளனர். அதற்காக சென்னையை சேர்ந்த சங்கர், மைக்கேல்ராஜ், எர்னாகுளத்தை சேர்ந்த ஐசக் மாத்யூ ஆகியோர் குற்றாலத்தைச் சார்ந்த தங்கபாண்டியன் என்பவரிடமிருந்து வாங்கி செல்ல தயாராக இருந்தது தெரியவந்தது. பின்னர் பிடிபட்ட பாம்பையும், அந்த 4 பேரையும் குற்றாலம் காவல்துறையினர் செங்கோட்டை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து பாம்பையும் பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேரையும் செங்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close