[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

“நாதுராமை பயங்கரவாதி என கமல் சொல்லியிருக்க வேண்டும்” - திருமாவளவன்

gandhi-is-extremist-thriumavalavan

காந்தி ஒரு இந்து தீவிரவாதி எனவும், அவரை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பயங்கரவாதி எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக்நகரில் ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “கர்மவினையில் தீவிர நம்பிக்கை கொண்டவர் காந்தி. அவ்வாறு நம்பிக்கை கொண்டவர்களே தீவிர இந்து. ஆங்கிலத்தில் Extremist என்றால் தீவிரவாதி எனவும், Terrorist என்றால் பயங்கரவாதி எனவும் அர்த்தம். காந்தி Extremist ஆக இருந்தார். கோட்சே Terrorist ஆக இருந்தார். எனவே நாதுராம் கோட்சேவை பயங்கரவாதி என்றுதான் கமல் சொல்லியிருக்க வேண்டும்.

அரச பயங்கரவாதத்தில் இருந்துதான் எல்லா பயங்கரவாதமும் உருவாகுகிறது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அரச பயங்கரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசியிருந்தார். கமலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close