[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

இரண்டு ஆண்டுகளில் 10 கிலோ தங்கச் சங்கிலிகள் வழிப்பறி - மதுரை நிலவரம்

10-kg-chain-snatching-in-two-years-at-madurai

மதுரை மாநகரில் கடந்த 2 ஆண்டுகளில் 10 கிலோ தங்கச் சங்கிலிகள் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

மதுரையில் நாளுக்கு நாள் வழிப்பறி கொள்ளை அதிகரித்து வரும் வேளையில், அதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் மதுரையில் நடைபெற்ற வழிப்பறிகள் குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெற்ற புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், 2017-ஆம் ஆண்டில் மட்டும் மதுரையில் 173 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 6.7 கிலோ தங்க நகைகள் பறிபோனதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், காவல்துறையினர் சுமார் 2.7 கிலோ தங்க நகைகளை மீட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 2018-ஆம் ஆண்டில் 132 வழிப்பறி வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும், சுமார் 3 கிலோ தங்கச் சங்கிலிகள் பறிபோனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், சுமார் 1.7 கிலோ தங்கச் சங்கிலிகளை காவல்துறையினர் மீட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வழிப்பறி குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் மாநகர் முழுவதும் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக மாநகர ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close