[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

கமல்ஹாசனுக்கு எதிரான மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

madurai-high-court-branch-dismissal-kamal-hassan-against-case

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற முறையீட்டை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

கமல்ஹாசன் பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டுமென்ற வழக்கறிஞர் சரவணன் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளை முறையீடு செய்திருந்தார். அத்துடன் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொது அமைதிக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார கூட்டத்தில் கமல்ஹாசன் பேசி வருகிறார், எனவே அவரது பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இதுதொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட இயலாது. ஏற்கெனவே இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் பிரச்சாரம் தொடர்பான புகார்களில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும். அதில் நீதிமன்றம் தலையிடாது. எனவே இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close