[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

தனக்குப் பிடித்த படிப்பை படிக்க விடாமல் தடுத்த தந்தை மீது மகள் புகார்‌

the-daughter-complained-to-her-father-for-not-having-read-her-favorite-study-in-chennai

கல்லூரி படிப்பில் தனக்குப் பிடித்தமான பிரிவை தேர்வு செய்ய தனது தந்தை இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த மாணவி தந்தை மீது புகார் அளித்துள்ளார்.

சென்னை ஐ‌யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் பன்னிரெண்டாம்‌ வகுப்பில் 65 சதவிகித மதிபெண்களு‌டன் தேர்ச்சியடைந்தார். அவர் இதழியல்‌ படிப்பு அல்லது சட்ட‌ப்படிப்பு படிக்க ஆர்வம் உள்ளதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் வேதியல் சார்ந்த படிப்பைதான் தேர்வு செய்‌ய வேண்டும் என அவரது தந்தை வ‌ற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

Related image

இந்நிலையில் அந்த மாணவி கல்லூரி படிப்பில் தனக்குப் பிடித்தமான பிரிவை தேர்வு செய்ய தனது தந்தை இடையூறாக இருப்பதாக கூறி குழந்தைகள் உதவி மையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது தந்தை சான்றிதழ்களை எடுத்து வைத்து கொண்டு கல்லூரியில் சேரவிடாமல் தடுப்பதாகவும் அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

Image result for girl education clipart

இதையடுத்து இப்புகார் சம்பந்தமாக அந்த மாணவியின் தந்தையிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்‌. அப்போது அந்த மாணவியின் தந்தை மதிப்பெண் சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களையும் மாணவியிடம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளார். 

மேலும் காவல்துறை அந்த மாணவியின் தந்தைக்கு அறிவுரை வழங்கியாக தெரிகிறது. தனக்குப் பிடித்த படிப்பை தேர்வு செய்ய தந்தை இடையூறு செய்ததால் மாணவி ஒருவர் புகார் அளித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close