[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வரும்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாஜக அரசு பாதுகாப்பாக இருக்கும் என மோடி பேசியது ஆறுதல்- திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

சாலையில் தவறவிட்ட நகைகள் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய குற்றவாளிகள்

the-police-arrested-2-person-who-stealing-jewels-on-the-road-in-chennai

சாலையில் தவறவிட்ட தங்க நகைகளை திருடிச் சென்ற 2 பேரை சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான் சாகிப் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீப்ரியா. இவர் கடந்த 4-ம் தேதி அவரது மாமியாருடன் அண்ணா சாலை வழியாக ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தனது கையில் வைத்திருந்த நகைகளை, பையோடு தவறவிட்டார். நீண்ட நேரம் தேடிப்பார்த்தும் நகைப்பை கிடைக்காததால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிபடையில் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் புகார் கொடுத்த நாளிலிருந்து சிசிடிவி கேமரா காட்சியை கொண்டு நகை காணாமல் போன இடத்தில் இருந்து தேடி வந்துள்ளனர். 

இந்நிலையில் அண்ணாசாலை தாராப்பூர் டவர்ஸ் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்த போது அப்பகுதியாக வந்த சரக்கு ஆட்டோவில்  இருந்த நபர் கீழே இறங்கி வந்து சாலையில் கிடந்த நகை பையை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இருப்பினும் பின்புறத்தில் ஆட்டோவில் நம்பர் பிளேட் சரியாக இல்லாததால் சுமார் 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

பின்னர் ஆட்டோவில் இருந்த சிறிய வெல்டிங் பதிவை வைத்து அந்த ஆட்டாவை அடையாளம் கண்டனர். மேலும் அந்த ஆட்டோ கொத்தவால் சாவடி பகுதியில் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.இதனையடுத்து அந்த ஆட்டோ ஓட்டுனர் பார்த்தசாரதியை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், நகையை எடுத்து சென்றதை ஒப்புக் கொண்டார். பின் இச்சம்பவத்துக்கு உதவிய வியாசர்பாடியைச் சேர்ந்த கலைசெல்வனை என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 19 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1500யை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

இதனைதொடர்ந்து திறம்பட செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்த சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசனை நேரில் அழைத்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார். மேலும் புகார் அளித்த ஸ்ரீப்ரியா மற்றும் அவரது கணவர் சம்பத்குமார் ஆகியோர் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close