[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

தமிழ் அன்னை சிலையா..? ஆரிய மாதா சிலையா..? - வைகோ கேள்வி

vaiko-statement-about-tamil-annai-statue

மதுரையில் அமையப்போவது தமிழ் அன்னை சிலையா..? இல்லை ஆரிய மாதா சிலையா..? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2013-ஆம் ஆண்டு மதுரையில் 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்த் தாய் சிலை நிறுவப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். ஜெயலலிதாவின் அறிவிப்பு வெளியாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை நிறைவேற்ற தற்போது எடப்பாடி அரசு முன்வந்திருப்பதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில் தமிழன்னை வடிவம் கற்சிலையில் கூடாது; பளிங்குக் கல், பைபர், கண்ணாடி ஆகியவை கொண்டு உருவாக்கப்பட வேண்டும் எனத் தமிழக அரசின்  பூம்புகார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழர்களின் நெஞ்சில் கனலை மூட்டி இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். தமிழினத்தின் தொன்மை வரலாற்றை நினைவு கூறும் வகையில் கற்சிலையாக தமிழ் அன்னை சிலையை வடித்தெடுப்பதற்கு மரபுவழி சிற்பிகள் தமிழ்நாட்டில் ஏராளமாக இருப்பதாக வைகோ கூறியுள்ளார்.

ஆனால் தமிழ்நாடு அரசு, பூம்புகார் நிறுவனத்தின் மேற்பார்வையில் வேதகால பிராமணிய, இந்து கலாச்சார முறைப்படி தமிழ் அன்னை சிலையை உருவாக்க திட்டமிடுவது கடும் கண்டனத்திற்குரியது எனக் குறிப்பிட்டுள்ள வைகோ, சங்ககால மரபையும், வேதகால மரபையும் எப்படி இணைக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே தமிழர்களின் கலை, பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ‘தமிழ் அன்னை’ சிலையை தமிழக சிற்பிகளைக் கொண்டு கற்சிலையாக மதுரையில் நிறுவிட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close