[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

“டூ வீலரில் 3 பேர் சென்றால் போலீசார் கண்டுகொள்வதில்லை”- உயர்நீதிமன்றம் கண்டனம்

police-allowed-3-person-travel-in-two-wheeler-chennai-high-court-condemn

இருசக்கர வாகனத்தில் விதிகளை மீறி மூன்று பேர் பயணிப்பதை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த நண்பர்கள் நான்கு பேர், விபத்தில் சிக்கினர். இதில் காயமடைந்த கணேசன், ரகு ஆகியோர் தங்களின் இருசக்கர வாகனம் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனம் பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சார்பு நீதிமன்றம் வழங்க உத்தரவிட்ட இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீடு செய்திருந்தனர். இவ்வழக்கு மீதான விசாரணை நீதிபதி வி.எம்.வேலுமணி முன்பு விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பேர் பயணித்ததை சுட்டிக்காட்டினார். அவ்வாறு செல்லும்போது இருசக்கர வாகனத்தை ஓட்டுவதில் சிரமம் ஏற்படும் என்பதையும், இதனால் நிலைதடுமாறக் கூடும் என்பதையும் கருத்தில் கொண்டே இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறி இருவரின் மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்குமேல் பயணம் செய்வது விதிகளுக்கு முரணானது என்றாலும், காவல்துறையினர் இதை கண்டுகொள்வதில்லை என்றும், நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் நீதிபதி தமது கண்டனத்தை பதிவு செய்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close