[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

தெலங்கானா- குமரி வரை காற்றழுத்தத் தாழ்வுநிலை... மழைக்கு வாய்ப்பு

chance-for-rain-in-tamilnadu

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே, தன் வேலையை காட்ட ஆரம்பித்த வெயில் அதன்பின் உக்கிரமானது. சென்னையில் மதியம் வேளைகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயில் கொளுத்துகிறது. இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெலங்கானா முதல் கன்னியாகுமரி கடல் வரை காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக கூறியுள்ள வானிலை மையம், அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close