[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

“காதலித்து திருமணம் செய்ய மறுக்கிறார்” - வைரல் ஆசிரியர் பகவான் மீது புகார்

young-woman-complain-on-viral-teacher-bhagavan-in-thiruthani-for-not-marrying-her-as-said

காதலித்து திருமணம் செய்துக் கொள்ள மறுப்பதாக கூறி இளம் பெண் ஒருவர் ஆசிரியர் பகவான் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளிகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கோவிந்த் பகவான்(32). கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர்கள் பொதுப் பணியிட மாறுதலில் திருத்தணி அருகே அருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டார். ஆனால், ஆசிரியர் பகவான் பள்ளி மாணவர்களிடையே அன்பு பாசம் காட்டி நண்பராக பேசிப் பழகி, கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் பணி மாறுதலுக்கு கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

                           

மேலும், ஆசிரியர் பகவான் பள்ளியை விட்டு செல்லக் கூடாது என்று மாணவர்கள் ஒன்று கூடி ஆசிரியரைக் கட்டி தழுவி கதறி அழுது பாசப்போராட்டம் நடத்தினர். அது பார்போர் நெஞ்சை உலுக்கியது. இச் சம்பவம் ஊடகங்களில் பேசப்பட்டது. இச்சம்பவத்தால் ஆசிரியர் பகவானும் பிரபலமானார். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். மாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றியாக ஆசிரியர் பகவான் பணி மாறுதல் ரத்து செய்யப்பட்டு அதே பள்ளியில் பணியை தொடர அனுமதிக்கப்பட்டார். 

    

இந்நிலையில் ஆசிரியர் பகவான் சொந்த ஊராக பொம்மராஜிபேட்டை கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர் பெண் கவிதா(31) என்பவர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரில், “ஆசிரியர் பகவான் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, வரும் ஜூன் 18ல் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரியந்தது. இது குறித்து பகவானிடம் கேட்டால்,  ஊதாசினப்படுத்தினார். காதலித்து திருமணம் செய்துக்கொள்ள மறுக்கும் ஆசிரியர் பகவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

               

புகாரின் மீது இருவரையும் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்து சுமார் 5 மணி நேரம் விசாரித்தனர். இரு தரப்புக்கும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். மாணவர்களின் பாசப்போராட்டத்தில் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமான ஆசிரியர் பகவான் காதல் விவகாரத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள ஆசிரியர் பகவான், “என் மீது கூறப்பட்டுள்ள புகார் முற்றிலும் ஆதாரமற்றது. உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டு எனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் புகார் செய்துள்ளனர். புகாரின் மீது விசாரணைக்கு தயாராக உள்ளதாகவும், மருத்துவ பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close