[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

1.75 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருட்டு - பொதுமக்கள் வேதனை 

the-1-75-lakhs-worth-idol-is-stolen-in-pochampalli

போச்சம்பள்ளி அடுத்த வேலாவள்ளி கிராமத்தில் பட்டாளம்மன் கோயில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இக்கோயிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கோயிலின் பூசாரி கோட்டி பூஜை செய்து வருவது வழக்கம். 

இந்நிலையில் நேற்று இரவு கோயிலின் கதவு பகுதியை உடைத்துவிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கருவரையில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னால் ஆன பட்டாளம்மன் சிலையை திருடி சென்றுள்ளனர். 

Image result for ஐம்பொன் சிலை திருட்டு

வழக்கம்போல் இன்று காலை பூசாரி கோட்டி கோவிலுக்கு வந்து பார்த்தபோது சட்டர் உடைப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மற்றும் சிலையின் கழுத்திலிருந்த ½ சவரன் தாலி உள்ளிட்டவற்றை திருடி சென்றது தெரிய வந்தது. 

இதையடுத்து கிராமத்தினர் மத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கோவிலில் இருந்த மற்றொரு சிலையிலிருந்த பண மாலை திருடப்படாத நிலையில் ஐம்பொன் சிலையை மட்டும் குறிவைத்து திருடியிருப்பது கிராம மக்களிடையை ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக திருடப்பட்ட சிலையை மீட்டு தர அக்கிராம மக்கள் காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close