[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

“ஜெனரேட்டர் பழுதானது உண்மைதான்” - ராஜாஜி மருத்துவமனை விளக்கம் 

madurai-rajaji-hospital-explained-about-3-people-death

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் பழுதானது உண்மைதான் எனத் தலைமை மருத்துவர் வனிதா தெரிவித்துள்ளார்.

இடி, மின்னல், காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, மதுரை அரசு மருத்துவமனை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6.20 மணியிலிருந்து 8.10 மணிவரை மின்தடை ஏற்பட்டது. மின்தடை காரணமாக, அரசு மருத்துவமனையில் விபத்து காய சிகிச்சை பிரிவு 101 ல் சிகிச்சையில் இருந்த மல்லிகா, பழனியம்மா, ரவிசந்திரன் ஆகிய மூன்று பேருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் தடைபட்டதாகக் கூறப்படுகிறது. 

மருத்துவமனையின் ஜெனரேட்டர்களும் இயங்காததால், ஆக்சிஜன் வாயு கிடைக்கபெறமால் இவர்கள் மூன்று பேரும் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில் ராஜாஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வனிதா புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கனமழை காரணமாக ஒரு மணிநேரம் மின்தடை இருந்தது உண்மைதான். ஜெனரேட்டர் பழுதானதும் உண்மைதான். ஆனால் நாங்கள் 2 மணிநேரம் தாக்கு பிடிக்கும் அளவிற்கு பேட்டரி பேக்கப் வைத்துள்ளோம். ஒவ்வொரு வெண்டிலேட்டருக்கும் தனித்தனி பேட்டரி பேக்கப் உள்ளது. அதன் மூலம்தான் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

அதனால் மின்தடை ஏற்பட்டு ஜெனரேட்டர் இயங்காததால் அவர்கள் உயிரிழந்தனர் என்பது தவறான செய்தி. அந்த வார்டில் 10 க்கும் மேற்பட்டோர் வெண்டிலேட்டர் பயன்படுத்தி சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 3 பேர் தான் உயிரிழந்தனர். மீதி 7 பேருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெண்டிலேட்டர் காரணமாக அவர்கள் இறக்கவில்லை. ஜெனரேட்டர் பழுதானது குறித்து விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close