[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கோயில்களில் தொடரும் கொள்ளை - காவலர் நியமிக்க வழக்கு 

madurai-hc-order-to-the-case-of-the-detention-of-the-policein-temple

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்பவும் அவர்களுக்கு முறையான ஊதியத்தை நிர்ணயம் செய்யவும் கோரிய வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல்   உத்தமபாளையம் அருள்மிகு கருப்பசாமி திருக்கோயில், அனுமந்தன்பட்டி அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோயில், கம்பம் அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில் மற்றும் ஓடைப்பட்டி காமாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

Image result for அறநிலையத்துறை

மே 3ஆம் தேதி ராயப்பன்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பூதநாராயணர் திருக்கோவிலில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 70 வயது முதியவர் மலையன் என்பவரை கொலை செய்ததோடு 60 வயது முதியவர் சுப்பிரமணியம் என்பவரை தாக்கி உள்ளனர். இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்பவும் அவர்களுக்கு முறையான ஊதியத்தை நிர்ணயம் செய்யவும், பணிக்கு முறையாக வருவதை உறுதி செய்யும் வகையில் அந்தந்த மண்டல இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர் ஆகியோர் திடீர்  ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும். அதோடு,  திருட்டு சம்பவங்கள் குறித்து முறையாக விசாரிக்காத காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

Image result for அறநிலையத்துறை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு, இது குறித்து உரிய பதிலளிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close