[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

கடத்தப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர் 8 மணி நேரத்தில் மீட்பு

kidnapped-man-rescued-in-8-hours

வேலூரில் நேற்று மதியம் கடத்தப்பட்ட தனியார் நிதி நிறுவன உரிமையாளர் 8 மணி நேரத்தில் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.

வேலப்பாடி பகுதியை சேர்ந்த நந்தகுமார், தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தனது அலுவலகத்தில் இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தில் நந்தகுமார் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக புகார் அளித்த நந்தகுமாரின் உறவினர்கள், கடத்திச் சென்றவர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறினர்.

புகாரையடுத்து நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட எஸ்பி பிரவேஷ்குமார், டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதனையடுத்து கடத்தப்பட்ட நந்தகுமார் 8 மணி நேரத்திற்கு பிறகு இரவு 10 மணியளவில் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் மீட்கப்பட்டார். காவல் துறையினரின் வாகன தணிக்கையில் சிக்கிக் கொண்டதால், கடத்தல்காரர்கள் நந்தகுமாரை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close