[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி

அட்சய திரிதியை ஆர்வம்... தங்க நகை விற்பனை அமோகம்  ! 

gold-jewelery-sale-is-increases-in-akshaya-tritiya

அட்சய திருதியை நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நகைக் கடைகளை நோக்கி மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். 

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் நகைகள் சேரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. எனவே தான் காலை முதலே நகைக்கடைகளுக்கு ஏராளமான மக்கள், படை எடுத்து வருகின்றனர். சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் காலை 6 மணி முதலே நகைக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அட்சய திருதியை நாளை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நகைக் கடைகள் பல சிறப்பு சலுகைகளையும் வழங்கியுள்ளது.  

Related image

சென்னை தி.நகரில் காலை முதலே மக்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல், கோவை ராஜவீதி, கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள‌ நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் கூட்டம்‌ அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். Image result for அட்சய திரிதியை

அட்சய திருதியை பிரபலமானதும், அதன் வீச்சு அதிகரித்துள்ளதும், அண்மைக்காலமாகத்தான். பொதுவாக அட்சய திருதியை நாளில், தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவது பெண்கள் தான் என்றாலும், ஆண்களும் இதில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பது மறுப்பதற்கில்லை. பொதுமக்களின் நகைத் திருநாளுக்கு, அதன் கொண்டாட்டத்துக்கும் தற்போது நடைபெறும் தேர்தல் குறுக்கே நிற்காது என்றே நம்பலாம். மேலும் கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு அட்சய திருதியை நாளன்று 3 முதல் 5 மடங்கு வரை தங்கம் விற்பனை அதிகரிக்கும் என்கின்றன தகவல்கள்.

Related image

அட்சய திரிதியையொட்டி நகைக்கடைகள் பலவும் சிறப்பு சலுகைகளை அறிவித்திருந்தாலும், தங்கத்தின் விலை இன்று கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 22 ரூபாய்க்கும், ஒரு சவரன் 40 ரூபாய் உயர்ந்து 24 ஆயிரத்து 176 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 10 காசு அதிகரித்து 40 ரூபாய் 20 காசாக இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close