[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்திய ஆண் குழந்தை மீட்பு

kidnapped-infant-is-rescue-in-10-hours-at-pollachi-government-hospital

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை, காவல்துறையினர் அதிரடியாக 10 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டுள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம் அருகேயுள்ள நரிகள் பதி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பாலன் மற்றும் தேவி. இத்தம்பதிக்கு ஏற்கெனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில், கர்ப்பம் தரித்த தேவி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த திங்கள்கிழமை அன்று ஆண் குழந்தை பிறந்தது. தேவியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பெண் ஒருவர், பிறந்த குழந்தையை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தேவி நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வரும்போது குழந்தையை தூக்கிக்கொண்டு உடன் வந்த அந்தப் பெண், திடீரென தலைமறைவாகிவிட்டார். நீண்டநேரம் தேடியும் அப்பெண்ணை கண்டுபிடிக்க முடியாததால், தலைமை மருத்துவர் கலைவாணி அளித்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையிலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட அந்த பெண் குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Image result for பொள்ளாச்சி குழந்தை மீட்பு

இதனையடுத்து சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். விசாரணையை துரிதப்படுத்திய காவலர்கள், குழந்தையை கடத்திச் சென்றவர் உடுமலையைச் சேர்ந்த மாரியம்மாள் என்பதை கண்டுபிடித்தனர். கடத்தப்பட்ட 10 மணி நேரத்தில் குழந்தையை மீட்கபட்டதை அடுத்து, மாரியம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார். குறை பிரசவத்தில் பிறந்த தனது குழந்தை உயிரிழந்ததை, உறவினர்களிடம் சொல்ல அச்சப்பட்ட மாரியம்மாள், பாலன்-தேவி தம்பதியரின் குழந்தையை திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் குழந்தை கடத்தப்பட்டதற்கு வேறு ஏதாவது காரணங்கள்? உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையை மீட்டு வந்த காவல்துறையினர் குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தை கடத்தப்பட்டு 10 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close