[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

''பேருந்தில் இடம்பிடித்த கோபக்கார தோனி'' - வைரல் புகைப்படம்!

bus-with-angry-dhoni-s-painting-goes-viral-in-social-media

ஐபிஎல் போட்டிகள் என்றாலே சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது. பெரும்பாலான போட்டிகளில் இறுதி கட்டத்தில் பரபரப்பு இருக்கும். இந்த ஐபிஎல்லில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் என்றால் அது கூல் கேப்டன் தோனியையே சற்று சூடாக்கிவிட்ட ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி.

கடைசி ஓவர் பரபரப்பில் நடுவர் நோ பால் என அறிவித்து பின்னர் முடிவை திரும்ப பெற்றார். இதனால், போட்டியின் நடுவே லேசான குழப்பம் நிலவியது. நடுவர்களிடம் பேட்டிங் செய்துகொண்டிருந்த ஜடேஜா முறையிட்டார். ரசிகர்களும் குழம்பிவிட்டார்கள். 

எல்லைக் கோட்டுக்கு வெளியே நின்று கொண்டு இதனை கவனித்துக்கொண்டிருந்த தோனி ஒருகட்டத்தில் பொறுமை இழந்து மைதானத்திற்குள் வேகவேகமாக சென்றார். நடுவர்களிடம் சென்று மிகவும் ஆக்ரோஷமாக விவாதம் செய்தார். இதனை யாருமே எதிர்பார்க்கவேயில்லை. தோனியா இப்படி மைதானத்திற்கு சென்று ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்? என அதிர்ச்சி அடைந்தனர். அந்த போட்டியில் சென்னை வெற்றிபெற்றது. ஆனாலும் எங்கள் கூல் கேப்டனையே இப்படி சூடாக்கிவிட்டார்களே பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடுவரிடம் தோனி வாக்குவாதம் செய்யும் அந்த குறிப்பிட்ட புகைப்படத்தை பேருந்தில் மிகப்பெரிய ஓவியமாக வரைந்து வைத்து பேருந்தை அழகுபடுத்தியுள்ளார் தனியார் பேருந்து உரிமையாளர். கரூர், நாமக்கல் பகுதியில் ஓடும் அந்த பேருந்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பார்த்தீர்களா தோனியின் கோபத்துக்கும் ரசிகர்கள் உண்டு என பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close