[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

வங்கி அலுவலக உதவியாளர் புதுக்கோட்டையில் சடலமாக மீட்பு  

bank-office-assistant-murder-in-the-pudukkottai

பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலக உதவியாளர் மாரிமுத்து என்பவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியின் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். அப்போது வங்கியில் 10 கிலோவிற்கு மேற்பட்ட நகைகளும் மாயமாகியது. இதையடுத்து தகவல்றிந்து வந்த போலீசார் மாரிமுத்துவின் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து கடந்த 5 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மாரிமுத்துவை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி இவருடையை கார் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரில் வங்கி சம்பந்தமான முக்கிய ஆவணங்கள், வங்கி சிசிடிவி கேமாரா காட்சி வீடியோக்கள் மற்றும் கவரிங் நகைகள் இருந்தன. இவற்றை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

இதைத்தொடர்ந்து இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி அருகே கோடியக்காடு கரை பகுதியில் ஒரு ஆண் சடலம் இருப்பது கண்டறியப்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார் இது மாரிமுத்துவின் சடலமாக இருக்குமா என்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்தவர் மாரிமுத்துதான் என்பதை அவரது மனைவி ராணி உறுதி செய்தார். இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வங்கி தரப்பில் இருந்து இதுவரை நகை காணமல் போனதற்காக எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close