[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

புதிய தலைமுறை செய்தியாளரை தாக்க முயன்ற மெட்ரோ குடிநீர் அதிகாரிகள்

metro-water-officers-try-to-attack-puthiyathalaimurai-reporter

குடிநீர் பற்றாக்குறை குறித்து செய்தி சேகரிக்க சென்ற புதிய தலைமுறை பெண் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை மெட்ரோ குடிநீர் விநியோக நிலைய அதிகாரிகள் தாக்க முயன்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் குடிநீர் வாரிய நீர் நிரப்பும் நிலையம் உள்ளது. அந்த வளாகத்திற்கு வெளியே குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான செய்தியை புதிய தலைமுறை பெண் செய்தியாளரும், ஒளிப்பதிவாளரும் பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பணியிலிருந்த அதிகாரிகள் இருவர், பெண் செய்தியாளரை செய்தி சேகரிக்க விடாமல் மிரட்டினர். மேலும், படம் பிடிக்கக் கூடாது என்று கேமராவை தட்டிவிட்‌டு உடைக்கவும் முயன்றனர்.

அதனால், அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு புதிய தலைமுறை பெண் செய்தியாளரும், ஒளிப்பதிவாளரும் சென்ற‌பிறகும், அவர்களை பின் தொடர்ந்துச் சென்ற மெட்ரோ குடிநீர் அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், செய்தியாளர்களை மிரட்டிய மெட்ரோ ஊழியர்களுக்கு அவர்களின் தவறு சுட்டிக்காட்டப்பட்டு, உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரிய இயக்குநர் ஹரிகரன் விளக்கமளித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் இனி நடை பெறாதபடி ‌நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், குடிநீர் வாரிய நீரேற்றும் நிலையத்திற்கு பொதுமக்கள் உட்பட யார் வேண்டுமென்றாலும் வந்து செல்லலாம் என்றும், அது தடை செய்யப்பட்ட பகுதி இல்லை என்றும் மெட்ரோ இயக்குநர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close