[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

தூங்கும் போது தலையில் கல்லை போட்டு கொலை செய்த தம்பி கைது 

the-brother-arrested-for-killing-his-brother-while-sleeping-in-theni

தேனி அருகே மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்த அண்ணனை, தூங்கும் போது தலையில் கல்லை போட்டு கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள முருக்கோடை கிராமத்தை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- பெருமாயி தம்பதியினர். கணவன் இறந்துவிட்டதால் பெருமாயி தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். மகன்கள் பட்டுராஜன் மற்றும் சௌந்தர்ராஜன் இரண்டு பேரும் கேரளாவில் கூலிவேலைக்கு சென்று வந்தனர்.

Image result for கல்லை போட்டு கொலை

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் ஊருக்கு வந்திருந்த நிலையில் அண்ணன் பட்டுராஜன், நாள்தோறும் குடித்துவிட்டு வந்து தாயிடமும் தம்பியிடமும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பட்டுராஜன், நேற்றும் குடிபோதையில் வந்து தகராறு செய்துள்ளார். இதனால் தம்பி சௌந்தர்ராஜன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பட்டுராஜானை தலையில் கல்லை போட்டு கொலை முயற்சி செய்துள்ளார். 

Related image

இதில் படுகாயமடைந்த பட்டுராஜாவை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் பட்டுராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் வருசநாடு போலீசார் அண்ணயை கொலை செய்த தம்பி சௌந்தர்ராஜனை கைது செய்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் வருசநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close