[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசிநாள்

tomorrow-last-date-for-filing-nomination-papers

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது. ‌

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்து திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டன. ஆனால் அதிமுக, அமமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்தும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. 

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் இவ்விரு கட்சியின் வேட்பாளர்களும் நாளை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர். இதற்கிடையில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை 98 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

அதில், அதிகப்பட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 42 வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், சூலூர் தொகுதியில் 23 வேட்புமனுக்களும்,‌ திருப்பரங்குன்றம் தொகுதியில் 20 வேட்புமனுக்களும், ஒட்டப்பிடாரத்தில் 13 வேட்புமனுக்களும் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள 98 வேட்புமனுக்களில் 62 வேட்புமனுக்கள் சுயேச்சையாக போட்டியிட தாக்கல் செய்யப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close