[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய குடும்பத்தினர் சுட்டுக்கொலை

sri-lanka-bomb-blast-related-family-die-for-gun-shoot

இலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட ஜக்ரான் ஹஸிமின் தந்தையும், அவரது இரு சகோதரர்களும், பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது.

ஈஸ்டர் தினத்தின்போது இலங்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அத்துடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை யார் செய்தார்கள் ?, இதற்கு முக்கிய காரணம் என்ன ? என்பது குறித்து தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஜக்ரான் ஹஸிமை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். இருதினங்களுக்கு முன், கல்முனையில் இருந்த அவரது வீட்டை சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியபோது, ஜக்ரானின் தந்தை முகமது ஹஸிம், அவரது இரு சகோதரர்களான ஜைனி ஹஸிம் மற்றும் ரில்வான் ஹஸிம் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனை ஜக்ரானின் மைத்துனர் உறுதி செய்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close