[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

சென்னையில் உல்பா தீவிரவாதியா? க்யூ பிரிவு போலீசார் விசாரணை

terrorist-arrested-in-chennai

சென்னை அமைந்தகரையில் கட்டுமானப்பணி ஊழியர் தன்னை தீவிரவாதி எனக்கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அஸ்ஸாமைச் சேர்ந்த கந்தர்ப்பதாஸ் என்பவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை கட்டுமானப்பணியில் வேலைபார்த்து வருகிறார். அவருடன் சேர்த்து அஸ்ஸாமைச் சேர்ந்த 5 பேரும் அங்கு வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்குள் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மோதலின் போது கந்தர்ப்பதாஸ், தான் ஒரு உல்பா தீவிரவாதி என்று மற்றவர்களை மிரட்டியுள்ளார். 

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் கந்தர்ப்பதாஸ் குறித்து விசாரித்துள்ளனர். மருத்துவமனையின் பாதுகாப்பு பிரிவு மேலாளர் கந்தர்ப்பதாஸ் குறித்து இணைய தளம் மூலம் தகவல்களை சேகரித்துள்ளார். அதில் அவர் உல்பா தீவிரவாதியாக இருந்ததற்கான ஆதாரங்களும், இது குறித்து கந்தர்ப்பதாஸ் மீது வழக்கு நிலுவையில் உள்ள தகவலும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் கந்தர்ப்பதாஸ் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கந்தர்ப்பதாஸிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close