[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

நடுரோட்டில் கல்லை போட்டு விபத்தை ஏற்படுத்தும் திருடர்கள் ! பதறவைக்கும் சிசிடிவி காட்சி

cctv-footage-of-terrific-accident-in-madurai

மதுரை மாவட்டம் திருநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த குமரகுருபரன் என்பவரது மகன் பாஸ்கரன். இவர் கே.கே நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  இவர் கடந்த 23- ஆம் தேதி கே.கே நகர் பகுதியில் வேலையை முடித்துவிட்டு இரவு 12 மணி அளவில் திருநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த கல்லில் மோதி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். பின்னர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று அதிகாலை 3 மணியளவில் பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

இதனையடுத்து விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின்போது விபத்து நடைபெற்ற இடத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் சோதனை செய்த போது அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் நடைபெற்று இருப்பது தெரியவந்தது. அந்த சிசிடிவி காட்சிகளில் பாஸ்கரன் இரவு வரும் வழியில் அடையாளம் தெரியாத மர்ம நபர் சாலையில் வெளிச்சம் குறைவான இருக்கும் பகுதிகளில் பெரிய கற்களை ரோட்டின் நடுவே வைத்து செல்கிறார். ரோட்டின் நடுவில் கல் இருப்பதை கண்ட டெம்போ வேன் டிரைவர் கல்லை அகற்றும் போது, அதை அந்த மர்ம நபர் தடுக்கிறார்கள். பின் பாஸ்கரன் இருசக்கர வாகனத்தில் வந்து கல்லில் மோதி விபத்து ஏற்படுகிறது. பின் பாஸ்கரிடம் உள்ள செல்போன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர் எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இதனைதொடர்ந்து ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி பாஸ்கரன் இருசக்கர வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தி அவரின் செல்போன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். 


இந்நிலையில் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை திருநகர் காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர். அவர் தனக்கன்குளம் பகுதியில் உள்ள பர்மா காலனியை சேர்ந்த ராஜா என்பது தெரியவந்துள்ளது. ராஜாவிடம் காவல்துறையினர் தனது முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close