[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

“வங்கக் கடலில் உருவாகிறது புயல்”- இந்திய வானிலை ஆய்வு மையம்

new-cyclone-chance-for-bay-of-bengal

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களிலும் கோடை மழை ஆங்காங்கே பரவலாக பெய்து வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை சற்று அதிகமாகவே பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இதுவரை மழை இல்லை. ஆனால் சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது, தொடர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமானது, தொடர்ந்து 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை முதல் தென்மேற்கு வங்கடல் பகுதி, இந்திய பெருங்கடல், இலங்கை கடல்பகுதியில் 30-40 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும் எனவும், நாளை மறுநாள் மற்றும் 27-ஆம் தேதி 40-50 கிமீ காற்ற வீசும் என கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close