[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

பெற்ற மகனை குடும்பத்தோடு கொலை செய்த தாய், தந்தை, சகோதரர்கள் கைது

youth-murdered-four-arrested

போதையில் தகராறு செய்த பட்டதாரி இளைஞரை கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஐய்யம்பேட்டை கந்தப்பர் தெருவை சேர்ந்தவர் மணி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும்,மூன்று மகன்களும் உள்ளனர். மூவரும் பட்டதாரிகள். இரண்டு மகன்கள் உள்ளூரில் வேலை செய்கின்றனர். மகேஷ் என்ற மகன் சிங்கப்பூரில் பணிபுரிகிறார். சிங்கப்பூரில் வேலை செய்யும் இரண்டாவது மகனான மகேஷ் அவ்வப்போது தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து செல்வார்.

இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் பணியாற்றி விட்டு தன் சொந்த ஊரான அய்யம்பேட்டைக்கு வந்தவர் மதுபோதையில் தன்னுடைய தந்தையுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆவேசப்பட்ட தந்தை மணி தன்னுடைய மூத்த மகன் மோகனவேல் மற்றும் இளைய மகன் ரமேஷ் ஆகியவருடன் சேர்ந்து மகேஷை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.  உடனே அவருடைய சடலத்தை தூக்கி அங்குள்ள ஃபேனில் தொங்கவிட்டு, மகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடி உள்ளனர்.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட வாலாஜாபாத்  காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனர். மேலும்  துணைக் கண்காணிப்பாளர் கீழ் இயங்கும் தனிப்படை தீவிர விசாரணை செய்ததில், மகேஷின் தந்தை மணி, மூத்த மகன் மோகனவேல், இளைய மகன் ரமேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து மகேஷை அடித்துக் கொலை செய்து தூக்கில் மாட்டிய விபரம் தெரியவந்தது. இதனையடுத்து மணி மற்றும் அவரின் மனைவி தமிழ்ச்செல்வி, மூத்த மகன் மோகனவேல், இளைய மகன் ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து வாலாஜாபாத் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

ஆவேசத்தால் பட்டதாரி குடும்பமே தற்போது கைதாகி காவல் நிலையத்தில் உள்ளது. அய்யம்பேட்டை பகுதியில் அரசாங்க அதிகாரியான ஓய்வு பெற்ற மணி மற்றும் பட்டதாரி பிள்ளைகள் ஆவேசத்தால் கொலை செய்யும் அளவுக்கு சென்றது இப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை உண்டாக்கி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close