[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உள்ளதாக மிரட்டிய கும்பல்: கத்தியால் குத்திய தந்தை..!

sexual-harassment-threat-to-child-near-vellore

வேலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுக்க உள்ளதாக கும்பல் ஒன்று மிரட்டியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை, கும்பலில் ஒருவரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிறுமியின் தந்தைக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொவருக்கும் வீட்டுமனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிறுமியின் தந்தையை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இன்று 5 பேர் கொண்ட கும்பல், சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் ரவி என்பவரது வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். பின்னர் சிறுமியின் தந்தையை தொடர்பு கொண்டு ‘உனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய உள்ளோம்’ என்று மிரட்டியுள்ளனர்.

பதற்றமடைந்த சிறுமியின் தந்தை உறவினர்களை அழைத்து கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார். அப்போது இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், 5 பேர் கொண்ட கும்பலில் குமார் என்பவரை சிறுமியின் தந்தை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த கும்பல், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களை வீட்டில் கட்டிப்போட்டு உள்ளனர். தகவல் அறிந்து வேப்பப்பட்டு போலீசார் அங்கு சென்று சிறுமி, அவரின் தந்தை மற்றும் உறவினர்களை மீட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close