[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

இலங்கை குண்டு வெடிப்புக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்

sri-lanka-blasts-virat-kohli-rohit-sharma-send-condolences-cricket-fraternity-condemns-attacks

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கொழும்பு நகரில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 180 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி தன்னுடைய ட்விட்டரில், “இலங்கையில் இருந்து வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். “என்னுடைய எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இலங்கை உடன் இருக்கும். என்ன ஒரு அழகான நாடு” என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

               

             

சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், “இலங்கையில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக என்னுடைய எண்ணங்களும், பிரார்த்தனையும் நிச்சயம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

                             

அதேபோல், ஹர்பஜன் சிங், “இலங்கையில் இருந்து வெளிவரும் செய்தி இதயத்தை நொறுக்கும் வகையில் உள்ளது. இலங்கை மற்றும் அதன் மக்களுக்காக என்னுடைய பிரார்த்தனை துணை நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close