[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்கள் இதயத்தை நொறுக்குகிறது - ஸ்டாலின்

dmk-leader-mk-stalin-condemned-multiple-blasts-in-sri-lanka-on-easter-sunday

கொழும்பு நகரில் நடைபெற்றுள்ள குண்டுவெடிப்பு சம்பவங்கள் இதயத்தை நொறுக்கும் வகையில் உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகரான கொழும்புவில் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் இன்று குண்டுவெடித்தது. அதே நேரத்தில் கிங்ஸ்பெர்ரி, ஷாங்ரி லா, சின்னமான் கிராண்ட் ஆகிய நட்சத்திர விடுதிகளிலும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொழும்புவுக்கு அருகே உள்ள நீர் கொழும்பில் உள்ள தேவாலயத்தில் குண்டுவெடித்துள்ளது. இதே போல தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு பகுதியிலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

             

கொழும்பு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது. இதன் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close